ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆய்வு செய்யும் குழுவில் மற்றுமொருவர் நியமனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவில் மற்றுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் (Shani Abeysekara) குறித்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார
இந்த நியமனம் பதில் காவல்துறை மா அதிபர், பிரியந்த வீரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட குழு
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்ய நேற்று (22) நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இந்தநிலையில் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தக் குழுவிற்கு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமை தாங்குவதுடன் மீதமுள்ள உறுப்பினர்களில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர் ஆகியோருடன் ஷானி அபேசேகரவும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
