தமிழ் மக்களுக்கான தீர்வுகளை தவிர்த்த அநுரவின் வரவு செலவு திட்டம்!
தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது வரவு செலவு திட்டம் நேற்றைய தினம் (07.11.2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூலம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
குறித்த வரவு செலவு திட்டத்தில் பல நிறை குறைகளும் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
பல புதிய விடயங்களும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் கூட தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் புதிதாக காணப்படவில்லை.
போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டது.
இந்த உறுதிமொழிகள் எந்தளவு தூரத்திற்கு நிறைவேற்றப்படும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதேவேளை, பாதுகாப்புக்காக கடந்த ஆண்டை விட 12 பில்லியன் ரூபா மேலதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவை உள்ளடங்கலாக நேற்றைய தினம் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தின் நிறை குறைகளை முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு..........
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |