வெற்றி நிச்சயம் : ஜனாதிபதி அநுர நம்பிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்(local government election) தாம் வெற்றி பெறுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (anura kumara dissanayake)இன்று(06) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாக்களித்த பின்னர், தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றிகரமான தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும்,தாங்கள் வெற்றிகரமான முடிவுகளைப் பெறுவார்கள் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.
புதிய அரசியல் கலாசாரத்தை மக்கள் பின்பற்றுவார்கள்
சமீபத்திய பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பிறகு நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் கலாசாரத்தை மக்கள் பின்பற்றுவார்கள் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
"தேர்தல் வெற்றியை மக்கள் அமைதியாகக் கொண்டாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பின்னரும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது மிகவும் முக்கியம்," என்று அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
