வவுனியாவில் வாக்களிப்பு வீதம் தொடர்பில் வெளியான தகவல்

Vavuniya Local government election Sri Lanka 2025
By Jaso May 06, 2025 12:19 PM GMT
Report

வவுனியாவில் (vavuniya)59.56சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.

வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அமைதியான முறையில் வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தநிலையில் மாலை 4 மணியுடன் வாக்களிக்கும் நடவடிக்கை நிறைவிற்கு வந்தது.

வவுனியாவில் வாக்களிப்பு வீதம் தொடர்பில் வெளியான தகவல் | Information On The Voting Rate In Vavuniya

வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 சபைகளுக்கும் 86 வட்டாரங்களில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1231பேர் போட்டியிடுகின்றனர்.

வாளுடன் வாக்குச்சாவடி முன்நின்ற இளைஞர்கள் கைது : தமிழர் பகுதியில் சம்பவம்

வாளுடன் வாக்குச்சாவடி முன்நின்ற இளைஞர்கள் கைது : தமிழர் பகுதியில் சம்பவம்

ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி

மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில்154 வாக்களிப்பு நிலையங்களும் 56 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வாக்களிப்பு வீதம் தொடர்பில் வெளியான தகவல் | Information On The Voting Rate In Vavuniya

காவல்துறையின் பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான வாக்களிப்பு இடம்பெற்றது. இதேவளை வாக்களிப்பு நடவடிக்கை முடிவடைந்துள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த வட்டாரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு கொண்டுசெல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் கட்சிகளே ஆட்சி அமைக்கும் : சித்தார்த்தன் பகிரங்கம்

உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் கட்சிகளே ஆட்சி அமைக்கும் : சித்தார்த்தன் பகிரங்கம்

வாக்குஎண்ணும் பணிகள் ஆரம்பம்

குறிப்பாக மாலை4.30 மணிக்கு வாக்குஎண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் இறுதி முடிவுகளை நாளையதினம் அதிகாலைக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

வவுனியாவில் வாக்களிப்பு வீதம் தொடர்பில் வெளியான தகவல் | Information On The Voting Rate In Vavuniya

இதேவேளை வாக்களிப்பு செயற்பாடுகள் சுமுகமாக இடம்பெற்றுள்ளதுடன் மாவட்டத்தில் பாரதூரமான தேர்தல் வன்முறைகள் எவையும் பதிவுசெய்யப்படவில்லை. அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என தெரிவித்தார்.

இம்முறையும் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கே : செல்வம் எம்பி சூளுரை

இம்முறையும் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கே : செல்வம் எம்பி சூளுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்