யாரிற்கும் அஞ்சப்போவதில்லை! பழிவாங்கல் தொடர்ந்தாலும் என் பணி தொடரும் - ஜே.வி.பியின் தலைவர் சீற்றம்
srilanka
anura dissanayake
janatha vimukthi
By Vasanth
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு தனது குடியுரிமையை இரத்துச் செய்தாலும் தான் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை ஜனாதிபதி உணர்ந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குடியுரிமையை சுருட்டி எங்காவது சொருவிக்கு கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார். கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய கருத்தரங்கொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி