அநுரவின் ஒரு வருட ஆட்சி :எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
Fuel Price In Sri Lanka
Anura Kumara Dissanayaka
Nalinda Jayatissa
By Sumithiran
ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவின் பதவிக் காலத்தின் முதல் ஆண்டில் எரிபொருள் விலை ரூ.17 இல் இருந்து ரூ.39 வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்றையதினம் ஊடகங்களுக்கு உரையாற்றிய அமைச்சர், அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடத்தைக் குறிக்கும் வேளையில், எரிபொருள் விலைகள் மற்றும் பிற பொருட்கள் மற்றும் சேவைகளின் குறைப்பு மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது என்றார்.
எரிபொருள் விலை குறைப்பு
தரவுகளின்படி, ஓகஸ்ட் 31, 2024 முதல் ஓகஸ்ட் 31, 2025 வரை, ஒரு லீட்டர் லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் விலை ரூ.33 குறைக்கப்பட்டது, அதே நேரத்தில் லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் யூரோ 4 குறைந்து விலை ரூ.36 குறைக்கப்பட்டது. லங்கா ஓட்டோ டீசல் விலை லிட்டருக்கு ரூ.24, சூப்பர் டீசல் ரூ.39, லங்கா மண்ணெண்ணெய் ரூ.17 குறைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
