இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அநுர அரசுக்கு கிடைத்த வெற்றி : போட்டு தாக்கும் சாகர காரியவசம்
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அநுர அரசாங்கம் கொள்கலன்களில் போதைப்பொருள் கண்டுபிடிக்கும் சகாப்தத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சாகர காரியவாசம் தெரிவித்துள்ளார்.
இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் அச்சுறுத்தல்
"நமது நாட்டில் எப்போதும் போதைப்பொருள் அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்பதை நாங்கள் அறிவோம். முன்னர், போதைப்பொருள் அச்சுறுத்தல் இருந்தபோது, அதைத் தடுக்க தேவையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொள்கலன்களில் போதைப்பொருள் கைப்பற்றும் சகாப்தம்
ஆனால் இதற்கு முன்பு கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, ஆனால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, கொள்கலன்களில் போதைப்பொருள் கைப்பற்றும் சகாப்தத்தை உருவாக்குவதில் இந்த அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
அது மட்டுமல்ல. அந்தக் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நேரடிப் பொறுப்பாகும் என்பதும் மிகத் தெளிவாகிறது."என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
