நிர்வாணப்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட தமிழ் சமூகம் : தொடரும் இராணுவ அடாவடி
தமிழ் மக்களின் ஆடைகளை கழைந்து தற்போது வரை இராணுவ சமூகம் தமிழ் மக்கள் மீதான கோபத்தை வெளிப்படுத்துவதாக கனடாவின் அரசியல் ஆய்வாளர் சேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியின் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்த காலத்தில் தமிழ் பெண்களை முன்னாள் இராணுவ வீரர்கள் நிர்வாணப்படுத்தி தகாதமுறைக்கு உட்படுத்திய போதிலும் தங்களது மக்கள் மீது எவ்விதமான நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.
யுத்த காலத்தில் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என பழக்கப்படுத்தப்பட்ட முன்னாள் போர் வீர்ர்கள் தற்போது திரும்பும் போது அதே மனநிலையில்தான் செயல்படுகின்றனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை, தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம், முன்னாள் ஜனாதிபதி ரணில் (Ranil Wickremesinghe) மற்றும் தற்போதை அநுரவின் (Anura Kumara Dissanayake) ஆட்சி குறித்த தெளிவூட்டல்கள் அத்தோடு எதிர்கால அரசியல் என அவர் தெரிவித்த மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது இன்றை ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
