மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள் : அநுர அரசின் பதிலடி
நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு அநுர (Anura Kumara Dissanayake) அரசு அனுமதி வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Gammanpila) மற்றும் சரத் வீரசேகர (Sarath Weerasekara) ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
அவர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜித ஹேரத் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில், போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக தெற்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.
அதேபோல் போரில் உயிரிழந்த தமது உறவுகளை தெற்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக வடக்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.
இனவாதக் கருத்துக்கள்
ஒவ்வொரு வருடமும் மே, நவம்பர் மாதங்களில் இத்தகைய இனவாதக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன இந்த இனவாதக் கருத்துக்கள் இனியும் இருக்கக்கூடாது.
நினைவேந்தல் உரிமை சகல இனத்தவர்களுக்கும் உரியது அதில் இன வேறுபாடு இருக்கக்கூடாது.
நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை எவரும் நடத்தலாம்.
அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதேவேளை, சட்டங்களை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் அது காவல்துறையினரின் கடமையாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |