உர மானிய கொடுப்பனவு : விவசாயியை ஏமாற்றியதா அநுர அரசு..!
பலாங்கொடை, நெல்லிவல, அலகொல எல்ல கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒரு இளம் விவசாயி, ஒரு ஏக்கர் நெல்லுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.10,000 உர மானியத்திற்குப் பதிலாக ரூ.1,486 மட்டுமே பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அந்தப் பணம் வங்கியில் வைப்பு செய்யப்பட்டதாகவும், தனக்கு ஒன்றரை ஏக்கர் நெல் வயல் இருப்பதாகவும், அதில் ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக ஜி.டபிள்யூ. வசந்த என்ற விவசாயி தெரிவிக்கையில்,
ஒரு ஏக்கருக்கு கிடைக்க வேண்டிய தொகை
எனக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த வருடம் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்துள்ளேன். எனவே அரசாங்கம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.25,000 உர மானியம் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி, ஒரு ஏக்கருக்கு ரூ. 10,000 எனக்குக் கிடைக்கும்.
கிடைத்த தொகை
கடந்த மாதம் 7 ஆம் திகதி, எனது வங்கிக் கணக்கில் மிகச் சிறிய தொகையான ரூ.1486 வரவு வைக்கப்பட்டது.
பயிரிடப்பட்ட ஏக்கருக்கு இடுவதற்கு எனக்கு சுமார் அறுபது கிலோ சிறுமணி உரமும் யூரியா உரமும் தேவை. எனவே, அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் சுமார் ஒன்பது கிலோ உரத்தை மட்டுமே வாங்க முடியும்.
கமநல சேவை நிலையத்திலிருந்து சுமார் 13 கிலோ சிவப்பு தூள் உரத்தைப் பெற்றேன். உரம் இல்லாமல், என் வயலில் உள்ள நெல் வளர்ச்சி குறைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |