மாற்றம் காணாத அநுர அரசு-:யாழிலிருந்து வெளிக்கிளம்பிய கண்டனம்
காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் தொழில் சங்கங்களை தமக்கு தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை.
ஆனால் தொழில் சங்கங்களின் ஒருமித்த ஆதரவுடன் ஆட்சிப் பீடத்தை பெற்றுக்கொண்ட இன்றைய அநுர தலைமையிலான அரசும் கடந்த கால அரசுகள் போலவே எம்மை தமக்கான பொம்மைகளாக பயன்படுத்த முனைகின்றது என வடமாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இவ்வாறான நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. அநுர அரசு எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவு செய்து கொடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மே தின ஏற்பாடுகள் குறித்து யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் கூறுகையில்,
மேதின எழுச்சி பேரணியை முன்னெடுக்க முடியாத நிலை
வடமாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மேதினத்தை முன்னெடுத்துள்ளது. இம்முறை காலச் சூழல் காரணமாக இம்முறை பிரமாண்டமான முறையில் மேதின எழுச்சி பேரணியை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது.
எனவே நல்லூர் முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் மேதின எழுச்சி பேரணியானது ஆரியகுளம் சந்தியை சென்றடைந்து ஸ்ரான்லி வீதியூடாக யாழ் நகரை சென்றடைந்து அதன் பின் யாழ் மாவட்ட செயலகம் சென்றடைந்து YMCA மண்டபத்தில் பேரணி கூட்டம் நடைபெறவுள்ளது.
அநுர அரசுக்கு எதிராக கோசங்கள்
நாம் இம்முறை 12 தொழில் சங்கங்களின் ஒத்துழைப்புடன் குறித்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். அந்த வகையில் இன்றைய அரசின் இத்தகைய போக்கை சுட்டிக்காட்டும் வகையில் கோசங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
