உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்குகள் இவர்களுக்குத்தான் : யாழ். மக்கள் அதிரடி
தற்போதுள்ள அரசியல் களத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் பாரிய அடிவாங்கி கொண்டிருப்பது என்பது யாவரும் அறிந்ததே.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என தமிழ் மக்களின் வெறுப்பும் ஆதங்கமும் வாக்குளில் வெளிப்பட்டு தமிழ் அரசியல் கட்சிகள் பாரிய வீழ்ச்சியை தழுவி இருந்தன.
இந்தநிலையில், அந்த தேர்தல்களை போல அல்லாது நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம் என தமிழ் அரசியல் தலைமைகள் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இருப்பினும், இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கும் போது கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை இல்லாவிடில் ஒரு போதும் நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என திட்டவட்டமாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இதனடிப்படையில், நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் அதில் மக்களின் ஆதரவு யாருக்கு வழங்கப்படும் என்பவை தொடர்பில் வெளிப்படையான விமர்சனங்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
