அடுத்த தேர்தலுக்கு தயாராகும் இலங்கை!
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்த அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்த தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைககளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி மாகாண சபைத் தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான பிரசாரங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
சட்ட ரீதியான சிக்கல்
இவ்விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், மாகாண சபைத் தேர்தல்களை தாமத்தப்படுத்த அரசாங்கத்திற்கு எந்தவித தேவையும் இல்லை என தெரிவித்தார்.
குறித்த தேர்தலை நடத்துவதற்கு சட்ட ரீதியாக சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் குறித்த சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கான கலந்துரையாடல்களில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
இதேவேளை, சட்ட ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்து கொடுத்தவுடன் மாகாண சபைத் தேர்லை நடத்த அனத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்மை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
