ஜே.வி.பி தலைமையகத்தில் ட்ரம்ப்-மோடியின் படங்கள்! சாடும் எதிர்தரப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கால்மாக்ஸ், லெனின் காட்டிய வழிமுறைகளை விட்டுவிட்டு ட்ரம்ப்-மோடி செல்லும் பாதையில் செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
புதிய நண்பர்கள்
''பெலவத்தை ஜே.வி.பியின் தலைமையகத்தில் கால்மாக்ஸ், லெனின், விஜேவீர போன்றோரின் படங்களை எடுத்துவிட்டு இன்று ட்ரம்ப், நெத்தன்யாஹு ,மோடி ஆகியோரின் படங்களே வைக்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கங்களின் ஜனாதிபதிகளை கடுமையாக விமர்சித்து பேசும் அநுர இன்று ஜனாதிபதி செயலகத்தில் புதிய நண்பர்களை உருவாக்கி கொண்டுள்ளார்.
அவர்களே இன்று முழு நேரமும் ஜனாதிபதியை சுற்றியுள்ளனர்.
அரச நிறுவனங்களுக்கான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் அவர்களே தீர்மானம் எடுக்கின்றனர். பெலவத்த நண்பர்களை அநுர கைவிட்டுள்ளார்" என கூறியுள்ளார்.
