ரணிலின் வாரிசாக மாறிவிட்ட அநுர-ஹரிணி அரசாங்கம் : முன்வைக்கப்பட்ட கடும் குற்றச்சாட்டு
Anura Kumara Dissanayaka
Champika Ranawaka
Mahinda Rajapaksa
Harini Amarasuriya
By Jaso
அநுர-ஹரிணி(anura-harini) அரசாங்கம் ரணிலின்(ranil) வாரிசாக மாறிவிட்டது என்று ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(champika ranawaka) தெரிவித்தார்.
செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களை இந்த அரசாங்கம் செய்யாது என்று கூறிய இவர்கள் அனைத்து விடயங்களையும் இப்போது செய்து வருவதாகவும் ரணவக்க கூறினார்.
அரசியல் அநாதையாக மாறிவிட்ட மகிந்த
அரசாங்கம் ரணிலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், அவரது வாரிசாகச் செயல்படுவதாகவும் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க, அரசியல் ரீதியாக அனாதையாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) மீட்டெடுக்கும் பொறுப்பை தற்போதைய ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |