ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
Sri Lanka Army
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
By Shalini Balachandran
ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
நாட்டு மக்களிடையே அமைதியை பேணுவதற்கான தேவையை கருத்திற் கொண்டு குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) இன்றையதினம் (27) சபைக்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு
நாடாளுமன்ற அமர்வு, இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானதை தொடர்ந்து சபாநாயகர் இந்த உத்தரவை சபைக்கு அறிவித்திருந்தார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்(அத்தியாயம் 40) 12வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 18 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி