பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி : வடக்கு கடற்றொழிலாளர்களோ திண்டாட்டத்தில்

Thai Pongal Jaffna Anura Kumara Dissanayaka Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Erimalai Jan 10, 2026 02:47 PM GMT
Report

 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொங்கல் தினத்தை கொண்டாட யாழ் வருகின்றார் ஆனால் எமது வடக்கு கடற்றொழிலாளர்கள் திண்டாட்டத்தில் இருப்பதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் இ.முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்

இது தொடர்பாக அவர் இன்று(10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடமராட்சிக் கிழக்கில் அண்மைய நாட்களாக இந்திய இழுவை மடி படகுகள் சுதந்திரமாக,எந்தவித கைது அச்சமும் இன்றி தொழில் செய்து வருகிறார்கள் கரைக்கு அண்ணளவாக வந்து கடற்படை தளத்திற்கு அருகில் பயமின்றி துணிச்சலாக எப்படி அவர்களால் தொழில் செய்ய முடிகின்றது?

அத்துமீறும் இந்திய இழுவை மடி படகுகள்

எங்களுடைய கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கின்றது, கடற்படை அவர்களை கைது செய்யவில்லை. அண்மையில் கூட இந்திய துணை தூதுவரை சந்தித்து கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம். ஆனாலும் இதுவரை இந்த பிரச்சனைகளுக்கான முடிவு எட்டப்படவில்லை

பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி : வடக்கு கடற்றொழிலாளர்களோ திண்டாட்டத்தில் | Anura Jaffna Pongal Northern Fishermen Distress

 இலங்கை கடலுக்குள் அத்துமீறி நுழைந்து எங்களுடைய வளங்களை அவர்கள் சுரண்டிச் செல்கிறார்கள். ஆனாலும் இலங்கை கடற்படையால் இவர்களை கைது செய்ய முடியும். இலங்கை கடற்படை இவர்களை கைது செய்யாதது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது.

இந்த காலப்பகுதியில் வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு கடற்பகுதிகளில் இறால் அதிகமாக உற்பத்தியாகி பிடிக்கப்படுகின்ற காலம்.இதனை அவர்கள் நன்கு அறிந்து அத்துமீறி நுழைந்து எங்களுடைய கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து செல்கிறார்கள்

இந்த விடயங்கள் சம்பந்தமாக, அத்துமீறி நுழையும் இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டியது தொடர்பாக கடந்த 2ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை.

யாழில் சீற்றம் கொண்ட கடல்: வடக்கு மாகாணத்தில் நாளை காலை வரை மழை தொடரும் என அறிவிப்பு!

யாழில் சீற்றம் கொண்ட கடல்: வடக்கு மாகாணத்தில் நாளை காலை வரை மழை தொடரும் என அறிவிப்பு!

பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி

இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் பாமர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.வருகின்ற இரண்டாம் திகதி பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்காக இலங்கையினுடைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவிருக்கிறார். இங்கே வந்து பொங்கல் தினத்தை அவர் மகிழ்ச்சியாக கொண்டாடப் போகின்றார்.ஆனால் எங்களுடைய வடக்கு கடற்றொழிலாளர்கள் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி : வடக்கு கடற்றொழிலாளர்களோ திண்டாட்டத்தில் | Anura Jaffna Pongal Northern Fishermen Distress

ஜனாதிபதி பொங்கல் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடப் போகின்றார் ஆனால் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் எப்படி பொங்கல் தினத்தை கொண்டாடுவது?

 உடனடியாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறலை கட்டுப்படுத்த வேண்டும் இல்லை என்று சொன்னால் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் இந்த போராட்டங்களை வருகின்ற காலங்களில் விஸ்தரிப்பார்கள்.

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் முற்பணம்

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் முற்பணம்

கடலில் இறங்கி போராட வேண்டிய ஒரு நிலைமை வரும்

இலங்கை தமிழர்களும் இந்திய தமிழர்களும் ஒன்று சேர்ந்தால் தமிழர்களின் பலம் கூடிவிடும் என்பதற்காகத்தான் இரு நாட்டு கடற்றொழிலாளர்களையும் சண்டையிடவைத்து வேடிக்கை பார்ப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது

பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி : வடக்கு கடற்றொழிலாளர்களோ திண்டாட்டத்தில் | Anura Jaffna Pongal Northern Fishermen Distress

இனிவரும் காலங்களில் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்களை எதிர்த்து கடலில் இறங்கி போராட வேண்டிய ஒரு நிலைமை வரும். ஆகவே உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்துமாறு முரளிதரன் மேலும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026