11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு - முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளார்.
இதன்படி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இரண்டு சரீரப் பிணை
2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல்கள் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்குப் தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபரான முன்னாள் கடற்படைத் தளபதி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்ந்து இடம்பெற்ற வழக்க விசாரணை தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததை அடுத்து, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை செல்ல கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
அதன்பின்னர், இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 5 மணி நேரம் முன்