யாழ் A9 வீதியில் வெடித்த மக்கள் போராட்டம் - இடையூறு விளைவித்த காவல்துறை
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில், போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், யாழ்ப்பாணம் - செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுலியை பார்வையிடுவதற்காக வந்தனர்.
இதன்போது மயானத்துக்கு வெளியே, ஏ-9 வீதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச விசாரணை
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமக்கு உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம் என்பது வெறும் கண்துடைப்பாகவே காணப்படுகிறது.

எனவே எமது பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையே வேண்டும். தினம் தினம் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து வெவ்வேறு விதத்திலான கொடூரங்களை எடுத்துக்காட்டும் மனித என்புத் தொகுதிகள் வெளிப்படுகின்றன.
கடந்தகால சிங்கள படைகளாலும் அரசாங்கத்தினானுமே இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே இதற்கு சர்வதேச தீர்வு வேண்டும் என்று தெரிந்தனர்.
ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழு
போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காவல்துறையினர்செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பிரதிநிதிகள் இருவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஊடகவியலாளர்கள் அந்த குழுவினரிடம் கேள்வியெழுப்ப முயற்சித்த வேளை அதற்கு இடமளிக்காது அவர்கள் சென்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 5 மணி நேரம் முன்