கடனில் மூழ்கியது இலங்கை! விபரத்தை வெளியிட்ட அனுரகுமார
srilanka
economy
anura kumara dissanayaka
By Vasanth
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கருவூலத்திற்குள் உள்ள அனைத்து நிதிகளும் போதுமானதாக இருக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது? கருவூலத்தால் கிடைக்கும் ஆண்டு வருமானத்தை விட கடனை திருப்பிச் செலுத்தும் தொகை அதிகமானதாகும்.
2021 ஆம் ஆண்டில் இலங்கையின் வருமானம் 1,919 பில்லியன் என்றும், 2021 ஆம் ஆண்டிற்கான திருப்பிச் செலுத்தும் கடன் 2,017 பில்லியன் ஆகும்.
இந்நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கருவூலத்திற்குள் உள்ள அனைத்து நிதிகளும் போதுமானதாக இருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி