22வது அரசியலமைப்புத் திருத்தத்தில் உறுதியாக நிற்கும் ஜனாதிபதி அநுர! வெளியாகியுள்ள அறிவிப்பு
முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் மக்களுக்கு நீதியை உறுதி செய்யவும், நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுமே கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மிலாத்-உன்-நபி நிகழ்வில் இன்றையதினம் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சீர்திருத்தத்தைச் சுற்றி சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், நீதி அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் நம்பிக்கை
அந்தவகையில், பொதுமக்களுக்கு சிறிதும் அநீதி இழைக்கும் எந்தவொரு முடிவையும் தனது அரசாங்கம் எடுக்காது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வழக்குகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, மக்கள் நீதி அமைப்பின் மீது எவ்வாறு நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எதிர்ப்புகள் காரணமாக மாற்றப்படமாட்டாது என்றும், ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அவற்றைச் சரிசெய்ய தனது அரசாங்கம் எப்போதும் தயாராக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |