தமிழர் பிரதேசத்தில் அநுரவின் ஊடுருவல்: முடக்கப்பட்ட தமிழ் தலைமைகள்
கடந்த சில மாதங்களாக தமிழ் அரசியல் தலைமைகள் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுவதை அவாதானிக்க கூடியதாகவுள்ளது என அரசியல் விமர்சகர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
காரணம், தமிழர் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி அதாவது அநுர அலை அதிகமாக வீசப்படுவதன் மிகப்பெரிய எதிரொலிதான்.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தலையடுத்து தமிழர் பிரதேசத்தில் தமிழ் தலைமைகளின் அரசியல் எதிர்காலம் என்பது முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளமை இதன் ஊடாக பிரதிபலிகப்படுகின்றது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
காலம் காலமாக தமிழ் தேசியம், தமிழீழம் மற்றும் தமிழ் மக்கள் என பயணித்து வந்த கட்சிகளும் அதன் தலைமைகளும் சில இருக்கும் இடம்தெரியாமல் மறைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது.
தமிழ் தேசியம், தமிழீழம் என்ற போர்வையில் தமிழ் மக்களை ஏமாற்றியதன் விளைவாக மிகப்பெரிய பின்விளைவை தமிழ் கட்சிகள் சந்தித்ததுடன் எதிர்காலத்தின் அவற்றை தடுக்கும் விதமாக வாக்குகள் ஊடாக தமிழ் கட்சிகளுக்கு தமது கடும் எச்சரிக்கையை மக்கள் முன்னிருத்தியிருந்தனர்.
அந்த எச்சரிக்கை இனி மக்கள் முட்டாளாக்கப்படகூடாது என்பதன் அடிப்படையில் கற்பிக்கப்பட்ட பாடமே தவிர தமிழர் பிரதேசத்தில் தென்னிலங்கை தரப்பின் ஆதிக்கத்தை அங்கு நிலைநிருத்துவதற்கல்ல.
இருப்பினும், ஒரு சில தமிழ் கட்சிகளும் சரி அதன் தலைமைகளும் சரி விட்டதை பிடிக்காமல் அடுத்து மக்களின் நம்பிக்கைக்கு உரித்தாக பயணிக்காமல் இவ்வாறு ஒரு தென்னிலங்கை கட்சிக்கு வழிவிட்டு வாய்ப்பு அளிப்பது மிகவும் கவலையளிப்பதுடன் தமிழீழ அரசியலின் எதிர்காலத்தையும் கேள்விக்குரியாக்கியுள்ளது.
இவ்வாறு தமிழ் பிரதேசத்தில் அநுர அலையின் தாக்கம் ஊடுவதற்கு வழி வகுத்த காரணம் என்ன, தமிழ் தலைமைகள் இழைத்த தவறு என்ன, தமிழ் தலைமைகள் அடுத்து எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை என்ன மற்றும் பலதரப்பட்ட அரசியல் சார்விடங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐ.பி.சி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
