தேசிய தலைவருக்காக அநுர பிரசார கூட்டத்தில் ஒலித்த பாடல் : வாக்குக்காக அரசின் நகர்வு
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றில் தேசிய தலைவர் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் குறித்து வல்வெட்டித்துறை நகர சபை வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் (M.K Sivajilingam) கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றில் , தேசிய தலைவருக்கு சிலை வைப்போம், இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர்களை பதிப்போம் என குறிப்பிட்டுள்ளார்கள்.
குறித்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது.
பிரச்சார பாடல்
இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபை வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம், இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர் வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் உறுதி அளிப்பாரா ?
செய்வார்கள் எனில் , அதனை கடற்தொழில் அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தட்டும்.
அதனை விடுத்து, ஆதரவு பாடல் என பாடலில் யாரை குறிப்பிட்டார்கள் என குறிப்பிடாமல் மக்களை குழப்பும் செயலில் ஈடுபட வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
