ஐபோன் 15 வெளியாக இன்னும் சில நாட்களே : தொடர்ந்து சரிவை சந்திக்கும் அப்பிள் நிறுவனம்
அப்பிள் நிறுவனத்தின் பங்கு சந்தை அண்மைய நாட்களில் சரிவை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஊழியர்கள் ஐபோன்களை பயன்படுத்தக்கூடாது என்று சீனா தடை உத்தரவு பிறப்பித்ததே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று கருதப்படுகிறது.
சீன ஊழியர்கள், குறிப்பாக அந்நாட்டு அரசாங்க ஊழியர்கள் யாரும் அப்பிள் ஐபோன்களை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளிற்கான விற்பனைச்சந்தையில் மூன்றாவது இடத்தினை சீனா பிடித்திருந்தது.
பங்குச் சந்தை
இந்நிலையில், சீன அரசாங்கத்தின் இந்தப் புதிய தீர்மானம் அறிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டாவது நாளே அப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை வெகுவாக சரிந்தது.
பங்குச் சந்தை மதிப்பீட்டில் ஆறு வீதம் சரிந்துள்ளது இது சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.
சீனாவின் இந்த நடவடிக்கையானது, அமெரிக்காவிற்கு கடுமையான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிகழ்ந்து வரும் அரசியல் மோதல்களின் பின்னணியே இந்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தயாரிப்பு
இந்நிலையில்,எதிர்வரும் 12ஆம் திகதி அப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான iPhone 15 இனை அறிமுகப்படுத்தவுள்ளது.
iphone 15 அறிமுகமாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பங்குகளில் ஏற்படும் சரிவு அப்பிள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.