அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இந்த மாதம் 12 ஆம் திகதி அப்பிள் நிறுவனம் அதன் அடுத்த ஐபோன் இனை அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் வெகுவான பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் இனி அப்பிள் நிறுவனம் வெளியிட இருக்கும் தனது போன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு USB - type C சார்ஜிங் போர்ட்டை (charging port) ஐ இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களுக்கு என்று பிரத்தியேகமான சார்ஜிங் போர்ட்டை பயன்படுத்தி வந்தது.
டிசம்பர் 2024 க்கு முன்
இது சம்சங் (Samsung),ஹுவாவெய் (Huwawei) போன்ற போட்டியாளர்களிடமிருந்து அப்பிள் உற்பத்திப்பொருட்களை தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டியிருந்தது.
New iPhone, new charger: Apple bends to EU rules https://t.co/8rP0V0TqgI
— BBC News (World) (@BBCWorld) September 4, 2023
ஆனால் அப்பிள் நிறுவனம் இப்போது எடுத்துள்ள USB - Type C மின் இணைப்பி முறையானது, நுகர்வோரின் செலவீனங்களையும், மின்னணுக் கழிவுகளை குறைப்பதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முடிவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறைக்கு இணங்க எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி உற்பத்தியாளர்கள் எதிர்வரும் டிசம்பர் 2024 க்கு முன்னதாக தரப்படுத்தப்பட்ட சார்ஜிங் இடைமுகத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதே ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள ஒழுங்குமுறையாகும்.
அதற்கிணங்க அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட iPadகள் உட்பட ஏனைய அப்பிள் சாதனங்கள் USB-C ஐப் பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.