வட மாகாணத்தில் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் (Provincial Public Service Commission, NP) 4 பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் செயலாளர் ஆ.சிறி அறிவித்துள்ளார்.
அதன்படி, மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்), மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (மின்னியல்), மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (படவரைஞர்), வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை ஆகிய 4 பதவியணிகளுக்குமே இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண இணையத்தளம்
முழுமையான அறிவித்தல்கள் மற்றும் விண்ணப்பங்கள் என்பன www.np.gov.lk → Exam and Recruitment → Advertisement என்ற வடக்கு மாகாண இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பதவிகளுக்கு தகைமையுடையவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
