மெட்ரோ பேருந்து சாரதிகளுக்கு ஆட்சேர்ப்பு : தகுதியானவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள்!
இலங்கையில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மெட்ரோ பேருந்து நிறுவனமான “லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம்” (Lanka Metro Transit) தனது மெட்ரோ பேருந்து சாரதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய தகுதியானவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சையில் சித்தியடைந்தவர்களும் செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு இட்சத்திற்கும் அதிகமான சம்பளம்
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக் கோவையை careers@lankametro.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0701886886 என்ற WhatsApp இலக்கத்திற்கும் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் மெட்ரோ பேருந்து சாரதிகளுக்கு மாதாந்தம் 115,000 ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்