பல்கலைக்கழக நுழைவுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, தொடர்புடைய விண்ணப்பங்கள் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் இதற்கான பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
தகுதி பெற்றுள்ள மாணவர்கள்
அத்தோடு, ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக அதன் மென்ப் பிரதியை நிகழ்நிலையில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 62.64 வீதமானோர், அதாவது 176,527 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |