யுத்தத்தால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சரவை அனுமதி

Sri Lanka Cabinet Sri Lankan Peoples Sri Lanka Final War
By Sathangani Jun 03, 2025 10:21 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான வீடுகள் சேதமடைந்தன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2009 ஆண்டிலிருந்து இதுவரை 274,728 குடும்பங்களைச் சேர்ந்த 914,722 நபர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

வழங்கப்பட்ட நிதி

2024 ஆண்டின் இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சரவை அனுமதி | Approves Increase In Funding For Housing Projects

குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.

2009 ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு (Core families) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் மேலும் 16,759 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் விலை

குறித்த திட்டத்தின் ஆரம்பத்தில் 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட ரூபா 1,100,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 650,000 எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் தற்போதைய விலைகளுக்கு அமைய 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட  ரூபா 1,600,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 950,000 எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் : அமைச்சரவை அனுமதி | Approves Increase In Funding For Housing Projects

அதற்கமைய, 2025 ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும் அடிப்படையில் அரசினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை பின்வரும் வகையில் அதிகரிப்பதற்கு நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை ரூபா 1,500,000 வரை அதிகரித்தல்.

340 சதுர அடி வீட்டினை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை ரூபா 900,000 வரை அதிகரித்தல்.

தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி : சபையில் பொங்கியெழுந்த சிறீதரன்

தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி : சபையில் பொங்கியெழுந்த சிறீதரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   



ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்