நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள்! எம்பிக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
இலங்கையில் (Sri Lanka) தாங்க முடியாத வாழ்க்கைச் செலவில் மக்கள் தவிக்கும் வேளையில் வரியில்லா வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுப்பணித்துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள நிர்வாக தர அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை போன்று தங்களுக்கும் வாகன உரிமம் வழங்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை அந்தக் குழு சாதகமாக பரிசீலித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகரிடம் கோரிக்கை
பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாவனைக்காக வரியில்லா வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் (Mahinda Yapa Abeywardena) கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாடாளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்தவுடன் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அதனை நிதியமைச்சர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இலங்கையின் ஒவ்வொரு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவுகளின் பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட ஈரான் விமான சேவையுடன் இணையும் இலங்கை...! அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் கடும் எதிர்ப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |