திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்

Benjamin Netanyahu Israel Election Israel-Iran conflict
By Thulsi Oct 31, 2026 03:31 AM GMT
Report

பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் தீவிர வலதுசாரிக் கூட்டணிக்கோ முக்கிய எதிர்த்தரப்புக் கூட்டணிக்கோ புதிய அரசாங்கம் அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று அந்நாட்டின் மத்திய தேர்தல் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களையும், அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இதன்மூலம் அங்குப் பல வாரங்களுக்கு நீடிக்கக்கூடிய அரசியல் நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலில் வாழும் அரபுச் சிறுபான்மை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை - வெளியானது பின்னணி

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை - வெளியானது பின்னணி

தமிழ் பேசும் மக்கள் அரசியல்

அவர் மேலும் தெரிவிக்கையில், "இஸ்ரேலில் அரபுத் தலைமைகளின் கீழ் செயற்படும் இரு பிரதான அரசியல் கூட்டணிகள் தேர்தலில் போட்டியிட்டு, மொத்தமாக 19 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.

திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் | Arab Voters In Israel Shifted Political Landscape

இதன் மூலம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத் தீர்மானங்களில் அரசியல் ரீதியாகப் பேரம் பேசக்கூடிய பலமிக்கத் தரப்பாகத் தங்களை அவர்கள் நிலைநிறுத்தியுள்ளனர். இஸ்ரேலில் ஜனாதிபதி ஆட்சி முறை கிடையாது.

நாடாளுமன்றத்தின் ஊடாகவே பிரதமரும் அமைச்சரவையும் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது." - என்றார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலுடன் இதனை ஒப்பிட்டுப் பேசிய அவர், "இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நண்பர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அரசியல் அலைக்கு அடிபணிந்து வாக்களித்தனர்.

பரிசு தருவதாக ஏமாற்றி வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் அதிரடி கைது

பரிசு தருவதாக ஏமாற்றி வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் அதிரடி கைது

இஸ்ரேலிய அரபு மக்களுக்கு சலாம் 

இதன் பரிதாபகரமான விளைவாக, இன்று பல தமிழ் பேசும் மாவட்டங்களில் தங்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் என்ன என்பது கூட மக்களுக்குத் தெரியாத அவல நிலையே காணப்படுகின்றது.

திக்திக் நிமிடங்களில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் - பிரதமராவாரா நெதன்யாகு..! இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் | Arab Voters In Israel Shifted Political Landscape

இவ்வாறான பின்னணியில், இஸ்ரேலிய அரபுச் சிறுபான்மை மக்கள் அரசியல் தனித்துவத்துடன் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினருக்குக் கண் திறக்கும் பாடமாகும்.

நான் கூறுவதன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்குச் சிந்திக்கும் ஆற்றல் அவசியம். இஸ்ரேலிய அரபு மக்களுக்கு எனது சலாம் என்றார்.

விஷ ஊசி மரணதண்டனை முயற்சிக்குப் பின்னர் முதல்முறையாகப் பேசிய அமெரிக்கக் கைதி

விஷ ஊசி மரணதண்டனை முயற்சிக்குப் பின்னர் முதல்முறையாகப் பேசிய அமெரிக்கக் கைதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023