யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு
கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதேச சபைத் தவிசாளர் தன்னை “வெளியே போடா நாயே” என்று இழிவாகப் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைக்க முடியாத தரப்புகளை மாவட்ட அரசாங்க அதிபர் அழைத்தமை சுற்றுநிறுபங்களை மீறிய செயற்பாடு என்றும் கூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அர்ச்சுனா எம்.பி. தனது உரையில், “யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தனும், உதவித் தவிசாளர்களும், சபையின் நாகரிகத்தை மீறி, என்னை ‘வெளியே போடா நாயே’ என்று இழிவான வார்த்தைகளால் திட்டினர்.
இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதையையும், நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட வேண்டிய கௌரவத்தையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது,” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
