அர்ச்சுனா எம்.பியின் ஆபத்தான சாகசம் : பிரதமருக்கு பறந்த முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது அதனை காணொளியாக பதிவு செய்கின்ற காணொளி அவரது சமூக ஊடகங்களிலும், ஏனைய சமூக ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பிரதான வீதியில் பயணிக்கும்போது அவர் இவ்வாறு ஆபத்தான முறையில், தானே காணொளி பதிவு செய்வதை அவதானிக்க முடிகின்றது.
இது வீதியில் செல்கின்ற ஏனையவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகவே அமைகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆபத்தான சாரத்தியம்
சாதாரண ஒரு நபர் வாகனத்தை செலுத்தும்போது கைத்தொலைபேசில் உரையாடுவதோ, கைத்தொலைபேசியை பாவனை செய்வதோ தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன் அது ஆபத்தான சாரத்தியமாகவே கருதப்படும்.

இது இவ்வாறிருக்கையில் மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய மக்கள் பிரதிநிதி ஒருவர் இவ்வாறு ஆபத்தான முறையில் வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்துவது விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya), போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |