சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனே! சபை முதல்வரை வம்பிழுத்த அர்ச்சுனா
யாழ்ப்பாணம் என்பது தேசிய மக்கள் சக்தியின் வெத்தலைப் பெட்டியல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
மேலும், சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனே என சபை முதல்வரை வம்பிழுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையம் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வி தொடுக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண அபிவிருத்தி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து வடக்கு மாகாணத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனே.
நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் போக்குவரத்து அமைச்சர் ஒழுங்காக ஒரு பதில் வழங்கவில்லை. ஆனால் வடக்கில் அபிவிருத்தி எனும் பேரில் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்றனர்.
யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் நடைமுறைக்குட்படுத்தப்பட்டவை என்ன” எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
