கொழும்பில் பேருந்தின் மீது முறிந்து விழு்நத மரம் - போக்குவரத்தும் ஸ்தம்பிதம்
Sri Lanka Police
Colombo
Accident
By Kanooshiya
கொழும்பு (Colombo) - புறக்கோட்டை பகுதியில் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை மற்றும் காற்று காரணமாக இன்று (26) காலை மரம் முறிந்து பேருந்தின் மீது விழுந்துள்ளது.
போக்குவரத்து ஸ்தம்பிதம்
கொழும்பு, ஒல்கொட் மாவத்தை தொடருந்து தலைமையகத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





