யாழில் வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம்
Jaffna
Sri Lanka
Disaster
By Sathangani
யாழ்ப்பாணம் (Jaffna) - குப்பிளான் பகுதியில் நேற்று (25) வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்துள்ளது.
இந்த அனர்த்தத்தினால் குறித்த வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.
குறித்த விடயத்தினை யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
பலத்த சேதம்
குப்பிளான் பகுதியிலுள்ள J/211 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த அனர்த்தத்தினால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தகக்து.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

