அரசாங்கத்தால் இனியும் தப்ப முடியாது! சூளுரைக்கும் நாமல்
மொட்டுக் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தே அரசாங்கம் ஒரு வருடத்தை கழித்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நாமல் ராஜபக்ச இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மொட்டுக் கட்சி மீது குற்றச்சாட்டு
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரசாங்கம் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் எங்கள் மீது சுமத்தியது. தற்போது போதைப்பொருள் குற்றத்தையும் எங்கள் மீது சுமத்துகிறது.
இவ்வாறு அனைத்து குற்றச்சாட்டுகளையும் மொட்டுக் கட்சி மீது சுமத்தி விட்டு இனியும் அரசாங்கத்தால் தப்பிக்க முடியாது.
எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு முதல் சுங்கத்தால் சோதனைக்குட்படுத்தாமல் கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
இதேவேளை, சோதனைக்குட்படுத்தி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது எவ்வாறு என்பதையும் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

