அர்ச்சுனாவுடன் ஆளும் கட்சி கடும் முறுகல்: சபையில் கொந்தளிப்பு
உப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திக்கும் (Sunil Handunneththi) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் (Ramanathan Archchuna) இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்போது, ஆனையிறவு உப்பு தொழிற்சாலையில், தெற்கிற்கு வடக்கு உப்பு விநியோகம் நிறுத்தப்பட வேண்டும் என்று ஊழியர்கள் குழுவுடன் ஒரு போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஏற்பாடு செய்ததாக அமைச்சர் ஹந்தன்னெந்தி குற்றஞ்சாட்டினார்.
அர்ச்சுனாவின் பதில்
அத்துடன், "வடக்கு உப்பு மற்றும் தெற்கு உப்பு என்று எந்த உப்பும் இல்லை. எங்களிடம் இலங்கையின் உப்பு உள்ளது.
அந்த நாட்களில் நீங்கள் விடுதலைப் புலிகளின் உப்பை சாப்பிட்டிருக்கலாம். இனி அத்தகைய உப்பு இல்லை. நாங்கள் முழு நாட்டையும் ஒன்றிணைத்துள்ளோம்," என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, வடக்கின் உப்பை தெற்கிற்கு அனுப்பக்கூடாது என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்றும், ஆனையிறவு உப்பளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க மட்டுமே தான் மத்தியஸ்தம் செய்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
அதனை தொடர்ந்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஹந்துன்னெத்தி, தான் பொய் கூறவில்லை என்றும் தான் ஆனையிறவு தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடனான கலந்துரையாடல்களை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
