எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து முப்படையினர் வெளியேற்றம்...!

Sri Lanka Army Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Jaso Jul 06, 2022 02:23 AM GMT
Report

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முப்படையினர்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து அகற்றுமாறு பல தரப்பினரும்  கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து அகற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், இது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்ற போதிலும், அத்தகைய தீர்மானம் விரைவில் எடுக்கப்படலாமென பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள்

சில அரசியல் செயற்பாட்டாளர்கள், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் கலவரக் குழுக்கள் என்பன பல்வேறு சம்பவங்களை முன்னிறுத்தி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றமை தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த போதுமானளவு காவல்துறையினர் இன்மையால், முப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து முப்படையினர் வெளியேற்றம்...! | Armed Forces To Be Removed From Filling Stations

வழங்கப்பட்ட ஆலோசனை

சிவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை காவல்துறையினர் ஊடாக முன்னெடுத்து, தேவையான சந்தர்ப்பங்களில் மாத்திரம் முப்படையினரின் ஒத்துழைப்பை பெறுமாறு அனைத்து பிரிவினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய அமைதியின்மை சம்பவங்கள் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான அபாயம் காணப்படுவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நேற்றுமுன்தினமும் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகன் மீது எரிபொருள் நிலையத்தில் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி