துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது

Sri Lanka Police Gampaha Sri Lanka Police Investigation Crime
By Aadhithya Jun 17, 2024 12:13 PM GMT
Report

கம்பகா (Gampaha) பிரதேசத்தில் துப்பாக்கிகளை பயன்படுத்தி பல பொருட்களை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக படல்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நில் பனாகொட, திவுலபிட்டிய பின்னகலேவத்த மற்றும் தெவமொட்டாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், மூன்று வாரங்களுக்கு முன்னர் களுமடை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையம் ஒன்றில் வைத்தியர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கட்டுநாயக்கவில் போலி கடவுச்சீட்டுடன் கைதான பெண்

கட்டுநாயக்கவில் போலி கடவுச்சீட்டுடன் கைதான பெண்

மோட்டார் சைக்கிள்

சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதாக தெல்வகுர பிரதேச காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் இருவரையும் கைது செய்ய முற்பட்ட போது இவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது | Armed Robbery Suspects Arrested In Gampaha

இதனடிப்படையில், சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், எட்டு தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு, திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 6 கத்திகள், வீடுகளை உடைக்கும் கருவிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து - இலங்கையர் ஒருவர் படுகாயம்: மற்றுமொருவர் கைது

வெளிநாடொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து - இலங்கையர் ஒருவர் படுகாயம்: மற்றுமொருவர் கைது

மேலதிக விசாரணை

இந்நிலையில், தப்பிசென்ற இருவரையும் காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்று கைது செய்து சோதனையிட்ட போது சந்தேகநபர் ஒருவரிடமிருந்து கைக்குண்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது | Armed Robbery Suspects Arrested In Gampaha

இதன்போது, மற்றைய நபரிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்திய போது இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மினுவாங்கொட கட்டு அலேகம பிரதேசத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்கவில் போலி கடவுச்சீட்டுடன் கைதான பெண்

கட்டுநாயக்கவில் போலி கடவுச்சீட்டுடன் கைதான பெண்

கைதான சந்தேகநபர்கள் 

இதேவேளை, மொட்டாவ பிரதேசத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை ஒருவர் விற்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்றாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் 6 கத்திகள் அடங்கிய பையொன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது | Armed Robbery Suspects Arrested In Gampaha

குறிப்பாக கைதான சந்தேகநபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு போலி இலக்கத் தகடுகளை பயன்படுத்தி பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் படல்கம காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு திருட்டுச் சம்பவங்களும், கட்டான மற்றும் மினுவாங்கொடை பகுதிகளில் ஒவ்வொரு திருட்டுசம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025