இரகசியத் தகவலையடுத்து விசேட அதிரடிப்படை முற்றுகை!
srilanka
arrest
army
By Vasanth
பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலையொன்றை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கழிவுத் தேயிலையை குறித்த நிலையத்துக்கு கொண்டுவந்து, தூய தேயிலை என்ற போர்வையில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பட்டுள்ளன என விசேட அதிரடிப்படையினர் தகவல் வெளியிட்டர்.
அத்துடன், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் பூண்டுலோயா பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.




