வீடு புகுந்து வாள் மற்றும் இரும்புக் கம்பி கொண்டு தாக்குதல் - இராணுவ கமாண்டோ கைது!
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
வீடொன்றுக்குள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய சகோதரர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் மொரகஹஹேன நாகல கந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக மொரகஹஹேன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இராணுவ கமாண்டோ சிப்பாய் எனவும், மற்றையவர் அவரது சகோதரர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விசாரணை
சந்தேக நபர்கள் இருவரும் தாக்குவதற்கு பயன்படுத்திய வாள் மற்றும் இரும்புக் கம்பி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி