வெடித்தது மோதல் -பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு எதிராக புரட்சிக்கு தயாராகும் இராணுவம்?
imran khan
revolution
army
pakistan
By Sumithiran
பாகிஸ்தானில் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு புதிய தலைவரை நியமிக்கும் விடயத்தில் பிரதமர் இம்ரான்கான் (imran-khan)மற்றும் இராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும்(Kamar Javed Bajwa) இடையே முரண்பாடுகள் வலுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் புரட்சியில் இறங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை மீண்டும் பதவியில் அமர்த்தவும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் வெளிநாட்டில் உள்ள நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.