யாழில் மற்றுமொரு முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்
Sri Lanka Army
Jaffna
Sri Lankan Peoples
By Kajinthan
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
அங்கிருந்து வெளியேறிய இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள குறித்த காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வந்தது.
உத்தியோகபூர்வமாக கையளிப்பு
இந்தநிலையில் குறித்த காடாப்புலம் காணியானது இன்று (28) சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியில் இருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து அங்கிருந்த இராணுவத்தினர் சங்கானையில் உள்ள இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்