யோசித ராஜபக்ச வழியில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம்...! வெடித்த சர்ச்சை

Sri Lanka Politician Sri Lanka Yoshitha Rajapaksa
By Shalini Balachandran Jan 28, 2026 09:25 AM GMT
Report

இலங்கை கடற்படையில் பயிற்சி கேடட் அதிகாரியாக சேர்க்க, ஆட்களை இணைத்துக் கொள்ளவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதிகள் குறைக்கப்பட்டே யோசித ராஜபக்ச அதில் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருத்தது.

தற்போது குறித்த வழியிலேயே நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்ய பல அடிப்படைக் கல்வித் தகுதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல் : சட்டமா அதிபர் அறிவிப்பு

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல் : சட்டமா அதிபர் அறிவிப்பு

தொழில்முறை தகுதிகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டம் மற்றும் பல தொழில்முறை தகுதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

யோசித ராஜபக்ச வழியில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம்...! வெடித்த சர்ச்சை | Controversial Appointment Of Sl Deputy Gen Sec

தொழில்முறை தகுதிகளின் முக்கிய நிபந்தனை, உச்ச நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணியாக குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதாகும்.

அத்தோடு, பொது அல்லது தனியார் துறையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மனிதவள முகாமைத்துவம், பொது நிர்வாகம் மற்றும் வணிக மேலாண்மை போன்ற எந்தவொரு துறையிலும் சிரேஷ்ட பதவியில் குறைந்தது பத்து ஆண்டுகள் பொறுப்புகளை வகித்திருக்க வேண்டும்.

காற்றின் தரம் பாதிப்பு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காற்றின் தரம் பாதிப்பு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிதி விதிமுறைகள்

இதனுடன், முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல், சட்டமா அதிபர் திணைக்களத்தில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாக இருத்தல், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்றப் பணிகள் குறித்து சிறந்த அறிவு பெற்றிருத்தல் என்பன இதில் உள்ளடக்கப்படும்.

அரசு நிர்வாகம் மற்றும் நிதி விதிமுறைகள் பற்றிய புரிதல் பெற்றிருத்தல், சர்வதேச உறவுகளில் அனுபவம் ஆகியவை சிறப்புத் தகுதிகளாக கொண்டிருக்க வேண்டும்.

யோசித ராஜபக்ச வழியில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம்...! வெடித்த சர்ச்சை | Controversial Appointment Of Sl Deputy Gen Sec

இருப்பினும், சமிந்த குமார குலரத்ன இந்தப் பதவிக்கு பொருத்தமான எந்த அடிப்படைக் கல்வித் தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனுடன், இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிர்வாகத்தில் அரசியல் பதவிகளை மட்டுமே வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறை அறிமுகம்!

நாட்டில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறை அறிமுகம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016