வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் கைது
srilanka
arrest
abroad
court
By Sumithiran
போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய ஒருவரை பேலியகொட பிரதேச குற்றப் பணியகம் கைது செய்துள்ளது.
குறித்த சந்தேகநபர் 2007 ல் 100 கிராம் ஹெரோயினுடன் கண்டியில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கபட்ட நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
சந்தேகநபர் இல்லாமல் வழக்கை விசாரித்த பின்னர் சந்தேகநபருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்திருந்தது. சுமார் 11 ஆண்டுகளாக பொலிஸாரை ஏமாற்றி வந்த சந்தேக நபர், பேலியகொட டயர் சந்திக்கு அருகே வைத்து கைது செய்யப்பட்டார்.
43 வயதான சந்தேக நபர் கண்டியின் நட்டரன்போதாவில் வசிப்பவராவார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்