பியுமி ஹன்சமாலியின் கைது விவகாரம்: சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்
பணமோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali) எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (15) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பியுமி ஹன்சமாலிக்கு எதிரான விசாரணைகளை தடையின்றி தொடரலாம் என்றும் சட்டமா அதிபரினால் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
பியுமி ஹன்சமாலி தம்மை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (15) பரிசீலிக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.
மேலதிக பரிசீலனை
இதன்படி விசாரணைகள் முடியும் வரை மனுதாரரை கைது செய்ய மாட்டோம் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதன்படி, மனு மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |