2016 முதல் இலங்கையில் தலைமறைவாக இருந்த மர்ம நபர் சிக்கினார்!
srilanka
arrest
By Vasanth
சுமார் 5 ஆண்டுகளாக இலங்கையில் தலைமறைவாக இருந்த பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து இவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் தலைமை ஆய்வாளர் அன்சலம் டி சில்வா இதை தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அல்லது வேறு தீவிரவாத அமைப்புகளுடன் இந்த நபருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளுக்கு குறித்த நபரை தடுப்பில் எடுத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
48 வயதான குறித்த சந்தேகநபர் 2016 இல் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்