ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிடியாணை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று (15) இந்த உத்தரவை பிறப்பத்துள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற விசாரணைக்காக அவர்கள் முன்னிலையாகத் தவறியதன் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இதற்கமைய, அவர்களின் பிணையாளர்களுக்கு அறிவித்தல்களையும் அழைப்பாணைகளை வழங்குவதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலுக்கு அருகில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மேலும் 12 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |