குடு சலிந்துவை கைது செய்யுமாறு நீதிமன்ற பிடியாணை!
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Crime
                
                                                
                    Law and Order
                
                        
        
            
                
                By Raghav
            
            
                
                
            
        
    பிணையில் விடுவிக்கப்பட்ட குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்ஷிக குணரத்னவை கைது செய்யுமாறு பாணந்துறை (Panadura) நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகாத காரணத்தால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பிடியாணை
பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் அந்த நிபந்தனையை மீறிச் செயற்பட்டுள்ளதாக பாணந்துறை நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் (23.12.2024) சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, குடு சலிந்துவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. | 
 
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்
 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        